”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10 % கூடுதல் வரி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது உலக வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,

Trump warns world nations

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய தாக்குதலையும், வர்த்தக வரியையும்  கண்டித்தன. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபமடைந்து, பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

பிரிக்ஸ் அமைப்பை ஆதரிக்கும் இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யாவின் கூட்டு அமைப்பு பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியலில் ”இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. இதற்குப் பிறகு, ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை, உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு (கிழக்கு) அமெரிக்காவின் கட்டணக் கடிதங்கள் மற்றும் ஒப்பந்தங்களை வெளியிடப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவுக்கு எதிரானது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, டாலர் பயன்பாட்டை குறைத்தால் பிரிக்ஸ் நாட்டு பொருள்கள் மீது 100% வரி விதிப்போம் என ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், இந்த அறிவிப்பு உலக வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக ஜூலை 9, 2025 அன்று முடிவடையும் 90 நாள் வரி இடைநிறுத்த காலக்கெடு நெருங்குவதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்த முறை பிரிக்ஸ் உச்சிமாநாட்டை பிரேசில் நடத்தியது. இதில் பழைய 5 நாடுகளைத் தவிர (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா), புதிய உறுப்பு நாடுகளான எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகியவை பங்கேற்றன. ஜனவரி 1, 2025 அன்று பிரேசில் பிரிக்ஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்