விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!
விவாகரத்து வழக்கு: நடிகர் ரவி மோகன் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தரக் கோரி ஆர்த்தி புதிய மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணையில் உள்ளது.
முன்னதாக, இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேன்மொழி, இரு தரப்பினரையும் சமரச பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டார். இதுவரை மூன்று முறைக்கு மேல் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன, ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.
அப்போது, ரவி மோகன் விவாகரத்துக் கோரியும், தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்களுக்கு ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இப்பொது, நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து முடிவுக்கு பிறகு இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சி நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாள்களாக நடந்த அறிக்கை மோதல்கள் இருவரது பிரிவை உறுதி செய்வதுபோல் உள்ளன. அதன்படி, ரவி மோகன், ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் தன்னை பணத்திற்காக பயன்படுத்தியதாகவும், தனது சொத்துகளை வற்புறுத்தி பறித்ததாகவும் குற்றம்சாட்டியுனார்.
இதற்கு ஆர்த்தி, ரவி மோகனின் குற்றச்சாட்டுகளை மறுத்து, தனது 15 ஆண்டு திருமண வாழ்க்கையில் தனது கனவுகளையும் லட்சியங்களையும் துறந்து குடும்பத்திற்காக வாழ்ந்ததாகக் கூறியுள்ளார். மூன்றாவது நபர் (பாடகி கெனிஷா பிரான்சிஸ்) தங்கள் பிரிவுக்கு காரணம் என்றும், இது தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.