MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?
பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி நிச்சயம் வெற்றி பெற வேண்டும். ஆனால், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு அணி மட்டுமே தகுதிபெற உள்ளது.
இந்த நிலையில், மும்பைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்க முடியும். அதே நேரம், இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் அவர்களுக்கு 16 புள்ளிகள் கிடைக்கும், மேலும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறும். பிளே ஆஃப்களுக்கான போட்டியில் தொடர்ந்து இருக்க டெல்லி கேபிடல்ஸ் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். டெல்லி அணிக்கு கடைசி போட்டி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரானது.
இருப்பினும், இந்த போட்டிக்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு 4 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால், எந்த அணி பிளேஆஃப்களுக்குச் செல்லும்? என்று கேள்வி எழுந்துள்ளது.
இன்று மும்பை vs டெல்லி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அதன் பிறகு, மும்பைக்கு 15 புள்ளிகளும், டெல்லிக்கு 14 புள்ளிகளும் கிடைக்கும். மும்பை மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இந்த சீசனின் இறுதி லீக் ஆட்டங்களில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மோதுகின்றன.
பஞ்சாப் அணி ஏற்கனவே பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்தப் போட்டியில் மும்பை அணி பஞ்சாப் அணியை வீழ்த்தினால், டெல்லி அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டியின் முடிவு எதுவாக இருந்தாலும், பிளேஆஃப் போட்டியிலிருந்து டெல்லி வெளியேற்றப்படும். இன்றைய போட்டியில் என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.