ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து அசத்தினார்.

Mumbai Indians vs Delhi Capitals

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், பேட்டிங் செய்த மும்பை அணி, டெல்லி அணிக்கு 181 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. மூன்றாவது ஓவரில் ரோஹித் சர்மா (5) பெவிலியன் திரும்பினார். ரியான் ரிக்கல்டன் (25) மற்றும் வில் ஜாக்ஸ் (21) பெரிய ஸ்கோர்களை எடுக்கத் தவறிவிட்டனர்.

சொல்லப்போனால், பவர்பிளேயில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது மும்பை. ஆம், டெல்லி அணியின் அதிரடி பந்து வீச்சில் மும்பை அணியின் பாதி பேர் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா 5 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் சூர்யகுமார் யாதவ் அபாரமாக பேட்டிங் செய்து 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர், திலக் 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். அதே நேரம் டெல்லி அணிக்காக விளையாடி வரும் இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவ்,  மும்பை அணியின் ரிக்கள்டனை அவுட்டாக்கியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

கடைசியில் சூர்யா 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். நமன் 8 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். இந்த பார்ட்னர் ஷிப் மும்பையின் ஸ்கோரை 180 ரன்களுக்கு கொண்டு சென்றது. டெல்லி அணி தரப்பில் முகேஷ்குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்களயும், துஷ்மந்த சமீர, முஸ்தாபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இப்பொழுது, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களமிறங்க போகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்