அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

முன்னாள் குடியரசு தலைவரும், அறிவியலாளருமான மறைந்த அப்துல் கலாமின் பயோபிக் “KALAM- The Missile Man of India” என்ற பெயரில் தயாராகிறது.

KALAM

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு KALAM: The Missile Man of India’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஆதிபுரூஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் உருவாக உள்ளது. ராஞ்சனா, ஷமிதாப் அத்ராங்கி ரே மற்றும் தேரே இஷ்க் மே ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷின் ஐந்தாவது ஹிந்தித் திரைப்படம் இதுவாகும்.

இந்தப் படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸின் பூஷன் குமார் மற்றும் கிருஷ்ணன் குமார் மற்றும் அபிஷேக் அகர்வால் பிலிம்ஸின் அபிஷேக் அகர்வால் மற்றும் அனில் சுங்கரா ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, இயக்குனர் சேகர் கம்முலாவின் மும்மொழி படமான ”குபேரா” ஜூன் 20 அன்று வெளியாகிறது. மேலும், தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடைபடமும் வெளியாக காத்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்