biggboss 3: முகனுக்கு இவ்வோளோ கோபம் வருமா? நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், சாக்ஷி மற்றும் அபிராமிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அபிராமி மனமுடைந்து அழுகிறார். இதனையடுத்து அபிராமி அழுதுகொண்டு இருக்கும் போது, முகன் அவரிடம் பேசுகிறார். அப்போது முகன் கோபத்தில் அவர் உட்கார்ந்திருந்த பெட்டின் மீது கையால் குத்துகிறார். இதனால் அந்த பெட் சேதமடைந்துள்ளது.
#Day43 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/9TnB53qdbF
— Vijay Television (@vijaytelevision) August 5, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?
July 20, 2025