விராட் இன்று சதமடிப்பது தான், கங்குலிக்கு செய்யும் மிகப்பெரிய சமர்ப்பணம்; ஸ்ரீசாந்த்.!

Virat Kohli Century

ஐபிஎல் தொடரில் இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதமடித்து, டாடாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

16-வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, மேலும் ஐபிஎலின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில் இரண்டாவது பாதி, பிளேஆஃப் சுற்றை உறுதி செய்யும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.

இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி, சதமடிக்க வேண்டும் எனவும் அதனை சவுரவ் கங்குலிக்கு (டாடா) சமர்ப்பிக்க வேண்டும் எனவும் முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் க்கு அளித்த பெட்டியில் ஸ்ரீசாந்த் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்த் கூறியதாவது, டெல்லி-பெங்களூரு ஆட்டத்தினை நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

வார்னர் மற்றும் கோலி இடையே நடக்கும் ஆட்டத்தினை பார்ப்பதற்கு மற்றும் நோர்ட்ஜெ விற்கு எதிராக பெங்களூரு அணி வீரர்கள் எவ்வாறு விளையாடப் போகிறார்கள் என்பதைக் காணவும் நான் ஆவலாக உள்ளேன் என்று அவர் கூறினார். முக்கியமாக விராட் கோலி இன்று சதமடித்து அதனை டாடாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விராட் நீங்கள் களத்தில் நீங்களாகவே இருங்கள், RCB க்கு வெற்றி பெற்று தாருங்கள் என ஸ்ரீசாந்த் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையே சில காலமாக பனிப்போர் நடைபெற்று வருகிறது, கடந்த முறை இரு அணிகளும் மோதிய போட்டியிலும் கோலி, டாடாவை பார்த்து முறைத்ததாகவும், இருவரும் கை கொடுக்காமல் சென்றதாகவும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</

p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்