ஒடிசா ரயில் விபத்து… சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் உதயநிதி.
ஒடிசாவில் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களும் பெருமளவில் சிக்கியிருந்தனர், அவர்களை தனிவிமானம் மூலம் சென்னை அழைத்துவர நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சிலர் அங்கு சிக்கியுள்ளனரா என்று ஆய்வு செய்ய தமிழகத்திலிருந்து அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு நேற்று ஒடிசா புறப்பட்டு சென்றது.
அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் குழுவுடன் ஒடிசாவின் பாலசோருக்கு, விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர், மேலும் மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடமும் சென்று அமைச்சர் உதயநிதி நலம் விசாரித்தார்.
பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவர்களிடமும் அமைச்சர் உதயநிதி வலியுறுத்தி கூறினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @sivasankar1ss & அரசு உயர் அதிகாரிகளுடன் #CoromandelExpress விபத்துக்குள்ளான ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு இன்று மதியம் சென்றடைந்து, மீட்பு பணிகள் பற்றி கேட்டறிந்தோம்.
மேலும், பாலசோர்… pic.twitter.com/2q1Tah7wEx
— Udhay (@Udhaystalin) June 3, 2023