பிபார்ஜாய் புயல்..பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை வெளியிட்டது அரசு..!

steps to stay safe

பிபார்ஜாய் புயலுக்கு மத்தியில் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயல், சௌராஷ்டிரா, கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் உள்ள ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே, 15ம் தேதி மிக தீவிர புயலாக மாறி, 150 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பிபார்ஜாய் (Biparjoy) புயலுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டிற்குள் இருப்பவர்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகத்தை அணைக்க வேண்டும்.

கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். உங்கள் வீடு பாதுகாப்பற்றதாக இருந்தால், சூறாவளி தொடங்கும் முன் சீக்கிரம் வெளியேற வேண்டும். கொதிக்கவைத்த அல்லது குளோரின் கலந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையை மட்டும் நம்பவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வீட்டிற்கு வெளியில் இருந்தால் சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம். உடைந்த மின்கம்பங்கள் மற்றும் கம்பிகள் மற்றும் பிற கூர்மையான பொருட்களைக் கவனித்து அதிலிருந்து விலகி இருந்து, பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்