ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி அல்லி வருகை!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால், மருத்துவமனைக்கே நீதிபதி சென்று செந்தில் பாலாஜியை காவலில் வைப்பது குறித்து முடிவு.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி வருகை தந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உள்ளார் நீதிபதி அல்லி. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவலில் வைக்க உத்தரவிடுவதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் நீதிபதி.
செந்தில் பாலாஜியை காவலில் வைக்குமாறு அமலாக்கப்பிரிவு கோரும் போது, அதற்கு எதிராக வாதாட உள்ள வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ. அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது நிலை உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால், மருத்துவமனைக்கே நீதிபதி சென்று செந்தில் பாலாஜியை காவலில் வைப்பது குறித்து முடிவு செய்ய உள்ளார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நீதிபதி அல்லி வருகையை அடுத்து அமலாக்கத்துறை வழக்கறிஞர்களும் வருகை தந்துள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025