Chandrayaan-3 Launch Live Updates: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3

உலக நாடுகளே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சசதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திராயன் 3 விண்கலம், நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். மேலும், நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட செலவு 615 கோடி ரூபாயாகும். நிலவில் தரையிறங்க சந்திரயான் – 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணம் மேற்கொள்கிறது. பூமியில் இருந்து புறப்படும் எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட், 179 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலை நிறுத்தும். இதுவே முதல் கட்டமாகும். பின்னர் புவியின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை சுற்ற வைப்பது தான் இரண்டாவது கட்டமாகும். புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 36,500 கி.மீ., துாரம் வரை சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்படும்.
இதன்பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் – 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும். சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைய 40 நாட்கள் எடுத்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் சாதனம் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்காகத்தான் இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை பயணத்தை துவங்கிய சந்திரயான்-3,சரித்திரம் படைத்த இஸ்ரோ.!
dinasuvadu | chandrayaan3 | isro
சந்திராயன் 1 – சந்திராயன் 2 – சந்திராயன் 3 பற்றிய சிறிய சாதனை குறிப்புகளை இந்த தொகுப்பில் காணலாம்.மேலும் படிக்க.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியின் சந்திரயான்-3 இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:35 மணிக்கு நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்குகிறது.
பூமியில் இருந்து புறப்படும் எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட், 179 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில், சந்திரயான் – 3 விண்கலத்தை நிலை நிறுத்தும். இதுவே முதல் கட்டமாகும். பின்னர் புவியின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை சுற்ற வைப்பது தான் இரண்டாவது கட்டமாகும்.
புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 36,500 கி.மீ., துாரம் வரை சந்திரயான் – 3 விண்கலம் அனுப்பப்படும். இதன்பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் – 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்வீட்:
விண்வெளி ஆராய்ச்சியின் எல்லைகளைத் தள்ளும் ஒரு குறிப்பிடத்தக்க பணியான சந்திரயான் 3 க்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். அறிவியலின் முன்னேற்றம், புதுமை மற்றும் மனித ஆர்வத்தால் நம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததைக் கொண்டாடுவோம். இந்த பணி நம் அனைவரையும் பெரியதாக கனவு காணவும் நட்சத்திரங்களை அடையவும் ஊக்குவிக்கட்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்வீட் செய்துள்ளார்.
பாறைகளின் பண்புகளை ஆராய்வதே குறிக்கோள்:
நிலவு பயணத்தின் மூன்றாம் பாகமான சந்திரயான்-3 இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட உள்ளது. இந்த சந்திர பயணத்தின் தொடரின் ஆறு சக்கர லேண்டர் மற்றும் ரோவர் தொகுதியின் நோக்கம், வேதியியல் மற்றும் தனிம கலவைகள் உட்பட சந்திர மண் மற்றும் பாறைகளின் பண்புகள் குறித்த விஞ்ஞான சமூகத்திற்கு தரவை வழங்கும் பேலோடுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சந்திரயான் 3 குறித்து ட்வீட்
14 ஜூலை 2023 இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் எப்போதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3, நமது மூன்றாவது சந்திரப் பயணமானது, அதன் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று ட்வீட் செய்துள்ளார்.