கோடநாடு வழக்கு செப்.8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

udhagai court

கோடநாடு வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யவில்லை என தகவல்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வர உள்ளதாகவும், அப்போது, கோடநாடு வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதங்களை வைத்தார். மேலும், இன்று விசாரணையின்போது, வாளையார் மனோஜியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதன்பின் சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டதால், கோடநாடு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம். மேலும், வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கையையும் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்