RealmeNarzo60x5G: 29 நிமிடத்தில் 50% சார்ஜ்.! கண்ணை கவரும் டிசைன்.! அறிமுகமானது “ரியல்மி நார்சோ 60 x 5ஜி” ஸ்மார்ட்போன்.!

RealmeNarzo60x

ரியல்மி நிறுவனம் 6.74 இன்ச் டிஸ்பிளே மற்றும் 5000 mAh பேட்டரி கொண்டரியல்மி நார்சோ 60 x 5ஜி என்ற அட்டகாசமான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களாக ரியல்மி அதன் மற்ற ஸ்மார்ட்போன்களை விட நார்சோ மாடல்களில் கவனம் செலுத்தி வந்தது. அதன்படி, இதற்கு முன்னதாக, பிரிமியம் லூக்குடன் லெதர் பினிஷுடன் கூடிய ரியல்மி நர்சோ 60 மற்றும் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது.

அந்த வரிசையில் தற்போது ரியல்மி நார்சோ 60 x 5ஜி ஸ்மார்ட்போனையும் இணைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி சொல்லப்பட்டதில் இருந்து பயனர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைக்குள் அடங்கும் வகையில் ஸ்லிம்மாக இருக்கும் என்று ரியல்மி தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரியல்மீ பட்ஸ் டி300 டிடபிள்யூஎஸ்-ஐயும்  வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே:

அதன்படி, இந்த ஸ்மார்ட்போனில் 6 லெவல் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் அளவுள்ள டைனமிக் அல்ட்ரா ஸ்மூத் எப்எச்டி+ டிஸ்பிளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெஃப்ரெஷ் ரேட் ஆனது சாதாரண பயன்பாட்டிற்கு 120ஹெர்ட்ஸ் எனவும், ஸ்ட்ரீமிங் செய்யும்பொழுது 90ஹெர்ட்ஸ் எனவும் படிக்கும்பொழுது 60ஹெர்ட்ஸ் எனவும் மாறுபடும். இதில் அதிகபட்சமாக 680 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. இது 7.89மிமி தடிமன் மற்றும் 190 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

கேமரா:

கேமரா அமைப்பை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா உள்ளது. அதில் 50எம்பி ஏஐ மெயின் கேமரா மற்றும் பிளாக் அண்ட் வைட் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. அதே போல, முன்புறத்தில் செல்ஃபிக்காக 8எம்பி கேமரா உள்ளது. பக்கவாட்டில் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது.

பிராசஸர்:

இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் அக்டோ கோர் 5ஜி சிப்செட் ஆனது பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் டூயல் 5ஜி மோட் , ஒன்பது 5ஜி பேண்ட் வரையிலான சப்போர்ட் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 உள்ளது. இது சாதாரண பயன்பாடுகள் மற்றும் ஓரளவு கிராபிக்ஸ் உள்ள கேம் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh அளவுடைய பெரிய பேட்டரி உள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் மொபைலை பயன்படுத்த முடியும். அப்பொழுது சார்ஜ் இறங்கிவிட்டால் வேகமாக சார்ஜ் செய்வதற்காக 33 வாட்ஸ் சூப்பர்வூவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த சார்ஜிங் வசதி மூலம் 29 நிமிடத்தில் 50 சதவீதம் மொபைலை சார்ஜ் செய்ய முடியும்.அதேபோல, 18 வாட்ஸ் சார்ஜரில் 53 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

மேலும், இதில் 4ஜிபி ரேம் + 128 இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128 இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன. ஸ்டோரேஜை 2 டிபி வரை உயர்த்திக்கொள்ளலாம். இதில் 4ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.12,999 என்ற விலையிலும், 6ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,499 என்ற விலையிலும் விற்பனையாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் 15ம் தேதி முதல், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் விற்பனை செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்