TNGovt: 1000 ரூபாய் பணம்.. கவலை வேண்டாம்! மீண்டும் நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்!

1000rs application

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அவர்களது வங்கி கணக்குகளில் ரூ.1000 உரிமைத்தொகை நேற்று முன்தினம் முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக உழைத்த அனைத்து அதிகாரிகளையும் பாராட்டி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனிடையே, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் நாளை மறுநாள் முதல் (18ம் தேதி) மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதில் சுமார் 50 லட்சம் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில், நிராகரிக்கப்பட்டோர் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாக  மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தகுதியான ஆவணங்கள் இருந்தால் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், நிராகரிக்கப்பட்ட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தியாக அனுப்பபப்டும் என்றும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்