நெதர்லாந்தை வீழ்த்தி முதல் இடத்தை தக்கவைத்த நியூசிலாந்து..!

#NZvNED

இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்து 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஒருநாள் உலக்கோப்பை தொடரின் இன்று 6-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள்மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து,  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடங்க வீரர்களாக கான்வே, வில் யங் களமிங்கினர். நிதானமானமாக விளையாடிய கான்வே பாஸ் டி லீடே-விடம் கேட்சை கொடுத்து 32 ரன் எடுத்து வெளியேறினார்.

பின்னர் இறங்கிய ரச்சின் ரவீந்திரன் வில் யங் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட தொடங்கினார். சிறப்பாக விளையாடிய வில் யங் அரைசதம் விளாசி  70 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இதில் 7 பவுண்டரி 2 சிக்ஸர் அடங்கும். மறுபுறம் விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரன் அரைசதம் விளாசி 51 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.பிறகு மத்தியில் கை கோர்த்த டேரில் மிட்செல், லாதம் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.  இருவரும் 101 சேர்த்தனர். இதில், லாதம் அரைசதம் விளாசி 53 ரன் எடுத்தார்.  டேரில் மிட்செல் 48 ரன் எடுக்க இறுதியில் களமிங்கிய சான்ட்னர் வந்த வேகத்தில் 36 ரன்கள் அடித்தார்.

இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 322 ரன்கள் சேர்த்தனர். நெதர்லாந்து அணியில் ஆர்யன் தத், வான் டெர் மெர்வே , பால் வான் மீக்கெரென் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 323 என்ற இலக்குடன் நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் ஏமாற்றத்தை கொடுத்தனர். விக்ரம்ஜித் சிங் 12 ரன்களும்,  மேக்ஸ் ஓ’டவுட் 16 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அடுத்து இறங்கிய பாஸ் டி லீடே வந்த வேகத்தில் 3 பவுண்டரி விளாசி  மொத்தம்  25 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  3-வது விக்கெட்டுக்கு களம் கண்ட கொலின் அக்கர்மேன் மட்டும் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி 69 ரன்கள் சேர்த்தார். அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் ஸ்காட் எட்வர்ட்ஸ் 30,  சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 29 ரன் விக்கெட்டை பறிகொடுத்தனர்.  இறுதியாக நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 223 ரன்கள் எடுத்து 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணியில் சான்ட்னர் 5 விக்கெட்டும்,  மாட் ஹென்றி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.நெதர்லாந்து அணி விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை தழுவியது. ஆனால் நியூசிலாந்து அணி விளையாடிய 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்