ராகு கேது பிடியில் இருந்து மீள செய்யும் காளஹஸ்தி கோவிலின் ரகசியம் ..!

kalakasthi

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய இந்தக் காள ஹஸ்தி என்ற ஊரில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலின் சிறப்பு, மற்றும் பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஸ்தல வரலாறு 

ஸ்ரீ என்பது  சிலந்தியும் காள  என்பது   பாம்பும் ஹஸ்தி  என்பது   யானையும் குறிக்கும்.  சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்று முக்தி பெற்றதால் ஸ்ரீ காள ஹஸ்தி என அழைக்கப்படுகிறது. கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் காற்று ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.

பூஜை நடக்கும் நேரம்

இங்கு ராகு காலத்தில் பூஜைகள் நடத்தப்படுகிறது. காலை ஏழு மணி முதல் இரவுஎட்டு மணி வரை பூஜைகள் நடத்தப்படுகிறது

இக்கோவிலில் செய்யக்கூடாதவைகள்

இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போல கீழே விழுந்து வணங்கக்கூடாது.

கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

இக்கோவிலில் பரிகாரம் செய்த பிறகு உறவினர் வீடுகளுக்கு மற்ற கோவில்களுக்கும் செல்லக்கூடாது.

இக்கோவிலுக்கு  செல்ல வேண்டியவர்கள்

ராகு கேது பிரச்சனை உள்ளவர்கள் எடுத்த காரியத்தில் தடை மற்றும் வாழ்வில்  முன்னேற்றம் இல்லாதவர்கள் இங்கு சென்று பரிகாரம் செய்தால் நல்ல பலன்கள் உண்டு என நம்பப்படுகிறது.

பரிகாரங்கள்

முதலில் கோவிலுக்குச் சென்றதும் அங்குள்ள  பாதாள விநாயகரை வணங்கி விட்டு தான் பரிகாரம் செய்ய வேண்டும். அர்ச்சனை சீட்டு வாங்கும் போதே பரிகாரத்திற்கு தேவையான பொருள்களும் வழங்கப்படுகிறது.

அதில் இரண்டு நாக உருவங்கள் இருக்கும் ஒன்று கருப்பு நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேலும் கருப்பு துணியும் சிவப்பு துணியும் தேங்காய் பூ, பழம் போன்ற பொருட்களும் கொள்ளு கேதுவிற்கு படைப்பதற்கும் உளுந்து ராகுவிற்கு தானியமாகவும் படைக்கப்படுகிறது.

தரையில் கருப்பு மற்றும் சிவப்பு துணிகளை விரித்து அதன் மீது கொள்ளு மற்றும் உளுந்தை  போட்டு ராகு கேது உருவங்களை வைத்து அர்ச்சகர்கள் கூறும் படி கூறி நாம் பரிகாரம் செய்ய வேண்டும்.

இது 45 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் பூஜை நடைபெறும். இந்த பூஜை முடிந்த  பின் அந்த நாக உருவ சிலைகளை சிவன் சன்னதி முன் உண்டியலில் தலையை மூன்று முறை சுற்றி விட்டு போட வேண்டும். இதை முடித்த பின் நேராக வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். வீட்டுக்கு சென்று   தலைக்கு குளிக்க வேண்டும் இதுவே பரிகார முறையாகும்.

பச்சைக் கற்பூரம் பன்னீர் விட்டு அரைத்து இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது சுவாச பிரச்சனையை  குணப்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்தப் பரிகாரம் செய்த பிறகு வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காணலாம். எடுத்த காரியம் வெற்றி அடையும் நீண்ட நாள் நடக்காத காரியங்கள் அனைத்தும் நடக்கத் துவங்கும். ஆகவே ராகு கேது பிடியில் இருப்பவர்கள் இக்கோவிலில் ஒருமுறை வந்து பரிகாரம் செய்து பயன்  அடையுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts