B.Sc யில் பட்டம் முடித்தவரா? ரூ.25,000-யில் வனத்துறையில் அரசு வேலை .!

வனத்துறை ஆட்சேர்ப்பு 2024 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பாக காலிப்பணியிடங்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வேலையின் விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 12-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27-07-2024 |
காலியிட விவரங்கள் :
- 1- தொழில்நுட்ப உதவியாளர் (Techinical Assistant)
கல்வி தகுதி :
- இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களுக்கு அரசின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பிஎஸ்சியில் (B.Sc) ஏதேனும் ஒரு அறிவியல் பாடப்பிரிவில் கட்டாயமாக பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், அதனுடன் அடிப்படையான கணினி அறிவை கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
- தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
வயது & இடம் :
வயது வரம்பு | குறிப்பிடவில்லை |
பணியமர்த்தப்படும் இடம் | கோயம்புத்தூர்- தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முகவரி :
வனச்சரக அலுவலகம், காரமடை வனச்சரகம், காரமடை, கோவை – 641104 என்ற முகவரிக்கு கடைசி தேதியான 27-07-2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.forests.tn.gov.in/ பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.
- அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- குறிப்பு : – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025