sensex-raise [Image source : Moneycontrol]
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த சில தினங்களாகவே சரிவுடன் வர்த்தகமாக வந்தது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றதோடு, ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு மேல் இழப்பை ஏற்படுத்தியது. இதனை சமன் செய்ய கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும் வர்த்தகமானது.
அதேபோல இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 14.68 புள்ளிகள் உயர்ந்து, 64,957.08 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 28.70 புள்ளிகள் உயர்ந்து 19,435.40 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 16.29 புள்ளிகள் சரிந்து, 64,942.40 புள்ளிகளாவும், நிஃப்டி 5.05 புள்ளிகள் சரிந்து, 19,406.70 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.17 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 81.44 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 68.00 அல்லது 1.05% குறைந்து ரூ.6,439 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் உள்ளது.
அதன்படி, ஏசியன் பெயிண்ட்ஸ் (+1.29%), சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (+0.79%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (+0.67%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (+0.71%), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (+0.71%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் (-1.07%), பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (-0.90%), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (-0.06%), பார்தி ஏர்டெல் லிமிடெட் (+0.03%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…