Categories: வணிகம்

பங்குச்சந்தை சரிவு.! சென்செக்ஸ் 66,166 புள்ளிகளாக நிறைவு.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகமான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அதன்படி, 66,238 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிவடைந்து 66,166.93 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிவடைந்து 19,731.75 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

முந்தைய வர்த்தக நாளில் 66,034 புள்ளிகள் என வீழ்ச்சியுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 125.65 புள்ளிகள் சரிவடைந்து 66,282.74 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 42.95 புள்ளிகள் சரிவடைந்து 19,751.05 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக அமைந்தது.

முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

21 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

54 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

54 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago