Sensex 1 [Representative Image]
இன்றைய வர்த்தக நாளில் 66,048 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 28.85 புள்ளிகள் உயர்ந்து 65,982 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 8.75 புள்ளிகள் உயர்ந்து 19,606 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,953 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,597 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
டெக் மஹிந்திரா, விப்ரோ லிமிடெட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…