கன்னியாகுமரி : தமிழக மின்சாரவாரியம் நாளை ஆகஸ்ட் 02/08/2024 கன்னியாகுமரியில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புபணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நாகர்கோவில் பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், அலம்பரை ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். தடிக்காரன்கோணம் கிரிபாரி, கடுக்கரை, பூதபாண்டி காலை ஆகிய பகுதிகளில் 8 மணி முதல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்தது. அதாவது, பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வெள்ள […]
வரும் 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. வரும் ஜனவரி 5-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார். தாணுமாலய சுவாமி கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5-ஆம் தேதி விடுமுறையை ஈடுக்கப்பட்ட பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு தூய சவேரியர் பேரலாய திருவிழாவை முன்னிட்டு நாளை அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜனவரி 28 ஆம் தேதியை பணி நாளாக அறிவித்துள்ளார்.
நாளை ராகுல் காந்தியின் பபுரட்சி பயணத்தை தொடங்கி வைக்க கன்னியாகுமரி பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக, இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி. நாளை (புதன்கிழமை) காலை ஸ்ரீபெரும்புதூர் வரும் ராகுல் காந்தி, அங்கு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின் கன்னியாகுமரி சென்று தனது பாதயாத்திரியை […]
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனி வார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் […]
நாகர்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் இன்று மத்திய சாப்பாடு, பருப்புக்குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாப்பிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறைக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் […]