அரசியல்

அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது – கே.எஸ்.அழகிரி

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள சொத்து விவரம் ராக்கெட் என்று பார்த்தால் புஸ்வானம் ஆகிவிட்டது என கே.எஸ்.அழகிரி விமர்சனம்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். #DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை எழும்பூரில் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் காங். […]

3 Min Read
Default Image

ராகுல்காந்தி சஸ்பெண்ட்.! தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் மறியல்.! காங்கிரஸ் கட்சியினர் தொடர் கைது.!

ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்  பேசி, மோடி பிரிவினரை இழிவுபடுத்தியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. […]

5 Min Read
Default Image

தமிழகத்தில் காவல்துறை தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது..! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!

தமிழகத்தில் காவல்துறை தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இன்று சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திமுகவின் ஆட்சி மீதும், திமுகவின் ஆட்சியில் காவலர்கள் நிலைமை குறித்தும் விமர்சனங்களையும் முன் வைத்தார். அதன்படி, தமிழகத்தில் காவல்துறை தாக்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியில் கம்பீரமாக இருந்த காவல்துறை, இன்று அடி வாங்கும் காவல்துறையாக மாறிவிட்டது, காவல்துறைக்கு […]

3 Min Read
Default Image

234 தொகுதி பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

234 பேரவை தொகுதிகளுக்கான திமுக பார்வையாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஆலோசனை.  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 234 பேரவை தொகுதிகளுக்கான திமுக பார்வையாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

2 Min Read
Default Image

ரபேல் வாட்ச் பில் விவகாரம் – வானதி சீனிவாசன் அதிரடி பதில்..!

பில் கேட்டீர்கள் பில் வந்ததா? இல்லையா?. பில் கேட்டீர்களா பில் சீரியல் நம்பர் கேட்டீர்களா? என வானதி சீனிவாசன் பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். #DMKFiles விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் […]

3 Min Read
Default Image

எந்த தடங்கலும் இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்..! அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூர் மாநகர பேருந்து நிலைய ரவுண்டானா அருகில், கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில், நீர்மோர் பந்தலை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கோடை காலத்தில், சீராக, எந்த தடங்கலும் இல்லாமல், மின்சாரம் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் […]

4 Min Read
Default Image

முதல்வரை சந்தித்த திருநங்கைகள்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம் என முதல்வர் ட்வீட்.  நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களை,  திருநங்கைகள் தினத்தினையொட்டி திருநங்கைகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.   முதல்வர் ட்வீட்  இந்த  நிலையில், புகைபபடத்தை வெளியிட்டு திருநங்கைகள் தினத்தினையொட்டி முதல்வர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பக்கத்தில், ‘திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கலைஞர்! அதைத்தான் […]

3 Min Read
Default Image

அண்ணாமலை பார்த்து நான் பயப்படவில்லை..! ஜெயக்குமார் பேச்சு..!

சென்னையில் அண்ணாமலையை பார்த்து நான் பயப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. சென்னையில் உள்ள கமலாலயத்தில் நேற்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டது நல்ல விஷயம் என்று திமுகவினர் குறித்து அண்ணாமலை வெளியிட்ட விவரங்கள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் பேட்டியளித்து வருகிறார். அதில், தற்பொழுது […]

3 Min Read
Default Image

அதிர்ச்சி : காதல் திருமணம் செய்த மகனை ஆணவக் கொலை செய்த தந்தை..!

கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் மகனை தந்தையே ஆணவக்கொலை செய்துள்ளார்.  கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் தந்தையே மகனை ஆணவக் கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சுபாஷ்- அனுஷா இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆணவக்கொலை  இதனால் ஆத்திரமடைந்த சுபாஷின் தந்தை தண்டபாணி அவர்களை வீட்டுக்கு வரவழைத்து, தூங்கி கொண்டிருந்த போது, சுபாஷ், மனைவி அனுஷா, சுபாஷின் பாட்டி கண்ணம்மா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த […]

2 Min Read
Default Image

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜுக்கு புதிய பொறுப்பு..!

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜை, திமுகவின் கழக செய்தி தொடர்பு துணை செயலாளராக நியமனம். கடந்த டிசம்பர் மாதம், அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்தார். அதனை தொடர்ந்து, அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் என குற்றசாட்டுகளை முன்வைத்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான […]

2 Min Read
Default Image

டெல்லியில் பரபரப்பு.! பாஜக முக்கிய நிர்வாகி கட்சி அலுவலகத்தில் சுட்டு கொலை.!

டெல்லியில் பாஜக நிர்வாகி சுரேந்தர் குமார் என்பவர் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியில் பாஜக நிர்வாகி ஒருவர் பாஜக அலுவலகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேந்தர் குமார் எனும் 60 வயது நபர் பாரதிய ஜனதா கட்சியில் விவசாய அமைப்பின் முக்கிய பநிர்வாகியாக பதவியில் இருந்துள்ளார். இவர் நேற்று துவாரகா பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வந்து […]

4 Min Read
Default Image

புல்வாமா தாக்குதல்.! அமைதியாக இருக்க பிரதமர் மோடி கூறினார்.! முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி.!

புல்வாமா தாக்குதல் பற்றி அமைதியாக இருக்கும்படி, பிரதமர் மோடி தன்னிடம் கூறினார் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பேட்டியளித்துள்ளார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தற்போது வரை இந்தியர்கள் மறந்திருக்க மாட்டார்கள. ஏனென்றால் ஒரே நேரத்தில் 40 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைந்தனர் . இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக […]

9 Min Read
Default Image

திராவிடக்கொள்கைகள் இந்தியா முழுதும் பரவிவருகிறது; முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

திராவிடக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருவதாக, சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு. சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வந்தார். அப்போது அவர் பேசுகையில், சமூகநீதி, சகோதரத்துவம், சமதர்ம கொள்கைகளை ஏற்று அதன்படி நாடு முழுவதும் உள்ள சக்திகள் ஒன்று சேரவேண்டும், இது வெறும் தேர்தலுக்காக மட்டும் அல்லாமல் இந்தியாவின் எதிர்காலத்திற்காக இனைய வேண்டும் என்று கூறியுள்ளார். திராவிடக் கொள்கைகள் நாடு முழுவதும் பரவி […]

3 Min Read
Default Image

அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி..!

ராகுல் காந்தி 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக்லேன் சாலையில் உள்ள  அரசு பங்களாவை காலி செய்தார். 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது . இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு இதனையடுத்து, ராகுல்காந்தி டெல்லியில் வசிக்கும் […]

4 Min Read
Default Image

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி காங்கிரஸில் இணைந்தார்..!

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமானலட்சுமண் சவடி காங்கிரசில் இணைந்தார். பாஜக முன்னாள் தலைவரும், கர்நாடகா முன்னாள் துணை முதல்வருமான லக்ஷ்மண் சவடி இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸில் இணைந்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடகா சட்டசபை தேர்தல் : கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். மீதம் உள்ள வேட்பாளர்களின் […]

5 Min Read
Default Image

இவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் – டிடிவி

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட்.  கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து மீனவ சமுதாயத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டிடிவி தினகரன் ட்வீட்  இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை […]

4 Min Read
Default Image

ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல..அவர்களுக்கும் தகுதி உள்ளது..! தமிழிசை பேச்சு.!

சென்னையில் ஆளுநர்களை குறைவாக மதிப்பிட்டு பேசுவது நல்லதல்ல, அவர்களுக்கும் தகுதி உள்ளது என ஆளுநர் தமிழிசை கூறினார். சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் அம்பேத்கர் ஜெயந்தியாக இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். குறுகிய வட்டத்தில் சுருக்க கூடாது : இதனையடுத்து […]

4 Min Read
Default Image

நான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திராவிட மண்தான் – காயத்ரி ரகுராம்

நான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திராவிட மண்தான் என காயத்ரி ரகுராம் பேட்டி.  அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். காயத்ரி ரகுராம் பேட்டி  சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றசாட்டுகளை முன்வைத்த பின்னும் நான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் திராவிட மண்தான். மிரட்டல் […]

2 Min Read
Default Image

அண்ணாமலையின் பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது..! ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். சென்னையில் உள்ள கமலாலயத்தில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தேனாம்பேட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், இன்று காலை அண்ணாமலை, ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை எனக் கூறியுள்ளார். நகைச்சுவை பேச்சு : மேலும் அவர் […]

5 Min Read
Default Image

#DMKFiles : கனிமொழி, கலாநிதி மாறன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு அண்ணாமலை வெளியிட்ட லிஸ்ட் இதோ….

திமுக எம்.பிக்கள், அமைச்சர்கள் குறித்து அவரது சொத்துக்கள் என அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கனிமொழி, கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரின் சொத்துக்கள் என குறிப்பிட்ட தொகை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.  திமுக சொத்துப்பட்டியலை இன்று வெளியிட போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னதாக அறிவித்து இருந்தார். அதற்கேற்றாற் போல, திமுக சொத்து விவரங்கள் (DMK Files ) எனபுதிய விடியோவுக்குகான முன்னோட்டத்தை நேற்று வெளியிட்டு, இன்று முதல் வீடியோவை சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் […]

5 Min Read
Default Image