தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணையும் தனது 51 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷுக்கு நாளை 40 வயதாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கிடையில், சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் விரைவில் துவங்குமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனுஷின் 51வது படமாக உருவாகிறது.
அதாவது, பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இயக்கும் தனது புதிய படத்திற்காக தனுஷ் இணைந்த செய்தி ஏற்கனவே வெளியானது. தற்போது, அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொது வெளியான டைட்டில் லுக் போஸ்டரில், ‘டி51’ என்ற தற்காலிகத் தலைப்புடன் கரன்சி நோட்டுகளால் வகுக்கப்படும் குடிசைப் பகுதி மற்றும் நகர்ப்புறம் காட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்க பழம்பெரும் நடிகர் நாகார்ஜுனா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு நடிகர்கள் மற்றும் படக்குழு குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
ஏற்கனவே கோடி படத்தில் தனுஷ் அரசியல்வாதியாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் அரசியல்வாதியாக அதுவும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…