sridivya [File Image]
நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்தார். பிறகு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு தற்காலிகமா விலகி இருந்தார்.
இவர் சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகி இருந்தாலும் கூட அவருக்கு ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. எனவே, ரசிகர்கள் அனைவரும் அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுக்கவேண்டும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். அதனைப்போலவே அவருக்கு விக்ரம் பிராவுக்கு ஜோடியாக ரெய்டு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையில், ஒரு நடிகை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவருடைய திருமணம் குறித்த கேள்விகளும் அவருடைய திருமணம் குறித்த வதந்திகளும் பரவி கொண்டு வருகிறது. இதனையடுத்து, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீ திவ்யா தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளர்.
எனக்கு காதல் திருமணம் தான் வேணும்! அடம் பிடிக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா!
பேட்டியில் கலந்துகொண்ட ஸ்ரீ திவ்யாவிடம் உங்களுக்கு திருமணம் எப்போது? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த ஸ்ரீ திவ்யா ” நான் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை. இப்போது சினிமாவில் மட்டும் தான் என்னுடைய முழு கவனம் வேறு எதிலும் என்னுடைய கவனம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
இதைப்போல மற்றோரு பேட்டியிலும் ” நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேன் . அது காதல் திருமணமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். திருமணம் நடைபெறும்போது அனைவர்க்கும் அறிவித்துவிட்டு தான் திருமணம் செய்வேன்” என தெரிவித்து இருந்தார். மேலும், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ரெய்டு திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…