gv prakash [file image]
தங்கலான் படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தங்கலான் படம் மிகவும் அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு என்னால் முடிந்த அளவிற்கு உழைப்பை கொடுத்துள்ளேன்,
இந்த படத்தில் அந்த காலத்தில் என்ன இசை பயன்படுத்தி இருக்கிறார்களோ அதே கருவிகளை பயன்படுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எந்த அளவிற்கு இசையமைக்க சேலஞ்ஜா இருந்ததோ அதே அளவிற்கு இந்த தங்கலான் படத்திற்கு இருந்தது. இந்த திரைப்படத்தில் புதிதாக இசையில் முயற்சி செய்து இருக்கிறேன்.
வழக்கமாக ஒரு படத்திற்கு இசைமைக்கிறோம் என்றால் குரல் மற்றும் சில கருவிகளை பயன்படுத்தவேண்டி இருக்கும். ஆனால், இந்த டீசரை பார்த்தவுடனே எனக்கு வித்தியாசமாக ஒரே கருவியை வைத்து இசையமைக்கலாம் என்று தோனியது. அதுவும் பலருக்கும் பிடித்தது. எனவே, பலரும் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள். அதனை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் மட்டும் என்னுடைய முழு உழைப்பை இந்த படத்திற்காக கொடுக்கவில்லை படத்தில் பணியாற்றிய எல்லா பிரபலங்களும் தங்களுடைய முழு உழைப்புகளை கொடுத்து இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தது தான் மிகவும் சேலஞ்ஜா இருந்துச்சு” என தெரிவித்துள்ளார். மேலும் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…