சினிமா

மேடையில் நின்று 13 மணிநேரம் பரிசு கொடுத்துவிட்டு மறுநாள் 7 மணிக்கே படப்பிடிப்புக்கு சென்ற விஜய்.!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் தான் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாக விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி நீண்ட நேரம் நடந்த நிலையில் ஒரு முறை கூட கீழே அமராமல் அங்கு வந்த அணைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை விஜய் வழங்கினார். ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் பெஞ்சை பிடித்துக்கொண்டு விஜய் நின்று கொண்டிருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கண்கலங்க வைத்தது என்றே கூறலாம்.

600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்!

இந்த நிலையில், 13 மணி நேரங்களுக்கு மேலாக மேடையில் நின்றுகொண்டே பரிசுகளை கொடுத்து வந்த விஜய் அடுத்த நாள் லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு காலை 7 மணிக்கு சென்றுவிட்டாராம். இந்த நிகழ்ச்சி நடைபெறும் முன்தினம் லியோ படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்தாராம். அப்போது நிகழ்ச்சிக்கு செல்வதை பற்றி விஜய் படக்குழுவிடம் பேசிக்கொண்டு இருந்தாராம்.

நான் மதியத்திற்குள் விழாவை முடித்துவிட்டு, மதியம் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்.. தாமதமானால் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என்று கூறினாராம்.  அதற்கு அடுத்த நாள் விழாவிற்கு வந்த விஜய் அடுத்த நாள் 13 மணிநேரம் மேடையில் இருந்த அவர் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்றார்.

எனவே, இவ்வளவு மணி நேரம் நின்ற அவர் அடுத்த நாள் ஓய்வு கேட்பார் என லியோ படக்குழு எதிர்பார்த்தார்களாம். ஆனால், அனைவர்க்கும் வியப்பூட்டும் விதமாக காலை 7 மணிக்கு சரியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டாராம். இந்த தகவலை லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

19 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

57 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

3 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago