triptii dimri [file image]
ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரைப்போல ராஷ்மிகாவும் அற்புதமாக நடித்திருந்தாலும் அவரைவிட திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. எனவே கடந்த சில நாட்களாவே சோஷியல் மீடியாவில் அவருடைய பெயர் தான் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த படம் வெளியாவதற்கு முன்னதாக இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பின்தொடர்பவர்களைக் திரிப்தி டிம்ரி கொண்டிருந்தார். தற்போது அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டாடப்பட்டு வருவதால் இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இப்படி அவருடைய கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது சரி சினிமாவை பற்றிய விஷயங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது திரிப்தி டிம்ரி யாரை காதலிக்கிறார் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்ற செய்திதான் பெரிய அளவில் பேசும்பொருள் ஆகியுள்ளது. அவர் தற்போது துருப்தி நடித்த ‘புல்புல்’ படத்தின் தயாரிப்பாளர் கர்னேஷ் சர்மாவுடன் தான் டேட்டிங்கில் இருக்கிறாராம்.
பட்டம் இனிமே உங்களுக்கு இல்ல! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!
கர்ணேஷ் சர்மா வேறு யாரும் இல்லை இவர் அனுஷ்கா சர்மாவின் மூத்த சகோதரர் ஆவார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பின் போது திரிப்தி டிம்ரி மற்றும் கர்ணேஷ் ஆகியோருக்கு இடையே காதல் ஏற்பட்டதாம். பல ஆண்டுகளாக உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்பற்றாமல், புகைப்படங்களையும் நீக்கினார்கள். இருவருக்குமே பிரேக்அப் ஆனது போலத்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். இதனை பற்றிய விவரத்தை அவரே தெரிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…