ஓடிடியில் மிரட்ட வருகிறது அரண்மனை 4! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published by
பால முருகன்

அரண்மனை 4 :  சுந்தர் சி இயக்கத்தில் ராஷி கண்ணா, தமன்னா பாட்டியா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தேவா நந்தா, யோகி பாபு, டெல்லி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ், லொள்ளு சபா சேசு, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அரண்மனை 4’.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.

படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தார்கள். இதனையடுத்து, அவர்களுக்காகவே படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, அரண்மனை 4 திரைப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் படத்திற்கான, ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை, இருப்பினும், படம் இந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதிகுள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படம் எந்த தேதியில் ஓடிடியில் வெளியாகும் என்ற ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

2 minutes ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

36 minutes ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

3 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

5 hours ago