Categories: சினிமா

ARRConcert : மோசமான கான்செர்ட்! சர்ச்சையில் முடிந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

Published by
பால முருகன்

இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள், ரசிகைகள் வருகை தந்திருந்தார்கள். வருகை தந்த அனைவரும் மிகுந்த சோகத்துடன் தான் திரும்பி சென்றார்கள் என்றே கூறலாம். ஏனென்றால், இசை கச்சேரிக்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லை.

எனவே, இதன் காரணமாகவே ஆசையாக இசை கச்சேரி பார்க்கவேண்டும் என வருகை தந்தவர்கள் பல மணி நேரம் காத்திருந்ததற்கு பிறகு தான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். அது மட்டுமின்றி, இந்த நிகழ்ச்சியை காண வருவதற்காக வைரம்,தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என ரூ.2,000 முதல் 20,000 வரை செலவு செய்து டிக்கெட் வாங்கி கொண்டு வருகை தந்தார்கள்.

இருப்பினும், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் கூட இசையை கச்சேரியை பார்க்க நூற்றுக்கணக்கானவர்களுக்கு இடம் கூட கிடைக்கவில்லையாம்.மொத்தமாக 20,000 இருக்கைகள் கிட்ட இருந்த அந்த இடத்தில் அதற்கு மேல் பலரும் கூட்டமாக கூடிய காரணத்தால் கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறினார்கள். இதனால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் கச்சேரி முடிவதற்கு முன்பே பாதியிலேயே வீட்டிற்கு சென்றனர்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பலரும் இதுபோன்று, நிறுவனத்திடம் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது நம்பகத்தன்மையை இழக்க வேண்டாம் என கூறி வருகிறார்கள். பலரும் இது மோசமான கான்செர்ட் எனவும் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இசை கச்சேரிக்கு வந்த பலரும் மேலும் சில நெட்டிசன்களும் இதுகுறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியீட்டு விமர்சனம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது. இனிமேல் இதுபோல் மோசமான ஏற்பாட்டுடன் இசைக்கச்சேரி நடத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

11 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

12 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago