vijay GOAT Ajith [file image]
சென்னை : கோட் படத்தை விட குட் பேட் அக்லி குறைவான விலைக்கு ஓடிடியில் விற்பனை ஆகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருந்தது. போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கு வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது, படத்தின் ஓடிடி விற்பனை, ஆடியோ விற்பனை ஆகியவை தான். அந்த வகையில், குட் பேட் அக்லி படம் ஓடிடியில் எவ்வளவு கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது எந்த ஓடிடி வாங்கியுள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட 95 கோடி கொடுத்து படத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தான் அஜித்தின் சினிமா கேரியரில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருப்பினும், குட் பேட் அக்லி படத்தால் விஜயின் கோட் படத்தை தொட முடியவில்லை என்றே கூறவேண்டும். ஏனென்றால், விஜய் நடித்துள்ள கோட் படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 110 கோடிகளுக்கு மேல் கொடுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் மூலம் குட் பேட் அக்லி படத்தை விட கோட் படம் தான் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விஜய் நடித்து முடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல, அஜித்குமார் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…