Categories: சினிமா

என்னது கருப்பு பணமா? நான் வெயிலில் கருத்த பணம் – kpy பாலா பதிலடி!

Published by
கெளதம்

சென்னை: கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாக எழுந்த விமர்சனத்திற்கு KPY பாலா பதிலடி கொடுத்துள்ளார்.

கலக்கு போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற பெயருடன் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், இப்பொது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார்.

இவர் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும்மல்ல, அவர் தற்போது மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். ஆம், தான் சம்பாதிக்கும் வருமானத்தில் பாதியை  ஏழைகளுக்கு செலவு செய்து உதவி வருகிறார். இவ்வாறு தனியாக உதவி வந்த kpy பாலா, அண்மையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இருவரும் இணைந்து தற்பொழுது பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த பாலா, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்பொழுது, ஒருவர் தான் உதவி செய்த வீடியோ ஒன்றில் கமெண்ட்ஸ் செய்திருந்தார்.  அதில், இத்தனை உதவிகளை வழங்கி வரும் இவர், யாருடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார் என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, அது மாதிரியான பணத்தில் நான் செலவு பண்ணல், வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில்தான் மக்களுக்கு உதவி செய்கிறேன்” என்று கூறினார்.  மேலும், எனக்கு பின்னாடி உதவி செய்யும் ஒரே நபர் அது ராகவா லாரன்ஸ் சார் மட்டும் தான் என கூறியுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

30 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

1 hour ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

3 hours ago