Sreeleela [File Image]
Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றயை காலகட்ட சினிமாவில் நடிகைகள் எல்லாம் ஒரு படத்தில் நடித்து டிரெண்ட் ஆவது போய் ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடி ட்ரெண்ட் ஆகி விடுகிறார்கள். அப்படி தான் நடிகை ஸ்ரீ லீலா கூட தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காண்டம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி ( Kurchi Madathapetti) பாடலுக்கு நடனம் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடுத்துவிட்டார்.
அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டதை விட அவர் ஆடிய அந்த பாடலின் நடனம் தான் அவரை ட்ரெண்ட் ஆக்கிவிட்டது. எனவே, நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக குவிந்து கொண்டு இருக்கிறது. தெலுங்கில் ஏற்கனவே, சில படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக தமிழும் ஸ்ரீ லீலா பிஸியாக உள்ளார்.
அதன்படி, நடிகை ஸ்ரீ லீலா அடுத்ததாக நடிகர் விஜயுடன் இணைந்து கோட் படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடி இருக்கிறாராம். அதனை போலவே, இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ள குட் பேக் அக்லி படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். படத்தின் கதை அவருக்கு ரொம்பவே பிடித்து போக படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
ஏற்கனவே, ஒரு பொது மேடையில் கூட நடிகை ஸ்ரீ லீலா தனக்கு தமிழில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு ரொம்பவே பிடித்து இருக்கிறது. தமிழ் படங்களில் நடிக்க நான் காத்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அவர் அப்படி பேசியதை தொடர்ந்து ஸ்ரீ லீலா விஜய்யுடன் நடனம் ஆடவுள்ளதாகவும், அஜித் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே, ரசிகர்கள் பலரும் ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை தான் ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க என்று கூறி வருகிறார்கள்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…