Maaveeran [file image]
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான நாளில் இருந்தே, பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஓப்பனிங்கை ‘மாவீரன்’ பெற்றுள்ளதாக வர்த்தக கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதாவது, துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மாவீரனுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாம்.
தமிகத்தில் மட்டும் இந்த திரைப்படம் முதல் நாளில் ரூ.7 கொடியும், இரண்டாம் நாள் ரூ.8 கொடியும், மூன்றாம் நாள் ரூ.10 கோடி என மொத்தம் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில், உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் ‘மாவீரன்’ படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிறப்பாக வசூல் செய்து வருகிறது.
மாவீரன்:
மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ படத்தின் கதையை மடோன் அஷ்வின் மற்றும் சந்திரா இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யோகி பாபு, சுனில், சரிதா மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர். சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள ‘மாவீரன்’ படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்க, இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்தது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…