இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அருண் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறவேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் கூட அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் என்னை அறிந்தால் […]
சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.
தளபதி விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளது. படத்தின் டீஸர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள நிலையில், இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெர்சல் படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் “சிஎஸ்கே. .சிஎஸ்கே..” என தொடர்ந்து போட்டி முழுவதும் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.