kavin [Image source : file image ]
டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவினின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில், இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கவினின் அடுத்த படத்தை பிரபல நடன இயக்குனரான சதீஷ் இயக்குகிறார்.
இந்த படத்தின் மூலம் சதீஷ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கூடுதல் பலம் என்றால் அனிருத் இசையமைப்பது தான். அட ஆமாங்க…தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வரும் அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த படம் பற்றியும் அனிருத்துடன் இணைந்தது குறித்தும் கவின் தனது ட்வீட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ” நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு எப்போதுமே பெரிய மற்றும் சிறிய கனவுகள் இருந்தன, அவை எப்போதாவது நிறைவேறுமா என ஆவலுடன் காத்திருந்தேன்.
அதில் ஒன்று அனிருத் சார் என்னுடைய படத்திற்கு இசையமைப்பது. அந்த கனவு இப்போது நிறைவேறிவிட்டது. அனிருத் சார் இந்த படத்தில் நீங்கள் ஒரு பாடலாவது பாட வேண்டும். நீங்கள் என் படத்திற்கு இசையமைப்பது என் வாழ்நாள் முழுவதும் ஆசை நிறைவேறியது போல் இருக்கிறது. சதீஸ் உங்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எனது தொழில் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. படத்தில் இயக்குனர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…