ratham - vijay antony [File Image]
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஆகிய 3 கதாநாயகிகளுடன் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் “ரத்தம்”. இப்படத்தின் டீசர் கூட, அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த திரைப்படம் செப்.28ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி இது குறித்து தனது X தள பக்கத்தில்,அது தொடர்பான புரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவை பகிர்ந்த விஜய் ஆண்டனி, எச்சரிக்கை வரும் செப்டம்பர் 28, தமிழ் நாட்டுக்கு ரத்தம் வரப்போகுது என்று குறிப்பிட்டுள்ளார்.
புரமோஷன் வீடியோவைப்போல படமும் நன்றாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் ஒரு பொழுதுபோக்குப் படமாக இருக்கும், இந்த திரைப்படம் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் கண்ணன் இசையமைக்க, ரதம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கிடையில், விஜய் ஆண்டனியிடம் அக்னிச் சிறகுகள், மழை பிடிக்காத மனிதன், காக்கி போன்ற படங்கள் தயாரிப்பில் பணிகளில் உள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…