Categories: சினிமா

அஜித் மனுஷனே இல்லை! பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

Published by
பால முருகன்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது அஜித் குறித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” 1995-96 அந்த காலகட்டத்தில் ஊருக்கு செல்வதற்காக என்னிடம் அஜித் பணம் கேட்டார்.

அந்த பணத்திற்கு நான் உங்களுக்கு படம் பண்ணி தரேன் அதில் நீங்கள் கழித்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.  அவர் அவசரமாக பணம் கேட்டவுடன் நான் பணம் கொடுத்துவிட்டேன். ஆனால், அந்த பணத்தை இன்னும் அவர் எனக்கு திருப்பி தரவே இல்லை. அதே போல என்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தருவதாக வாக்கு அளித்ததை இன்னும் நிறைவேற்றவில்லை. சினிமாவில் நடிக்க தெரியாது நல்லா வாழ்க்கையில் மட்டும் நடிக்கத் தெரியும்.

படத்துக்கு 10 கோடி விளம்பரத்துக்கு 5 கோடி? அதிர வைக்கும் நயன்தாரா சம்பளம்!

அவர் என்னிடம் கடன் வாங்கியிருந்தால், அந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்னும் என்னுடைய பணம் திரும்ப வரவே இல்லை. ஜெண்டில் மேன் என்று வார்த்தையால் சொல்ல கூடாது அவர் செய்யும் செயல்களில் தெரியவேண்டும்.  ” என்று பேசியிருந்தார்.  அஜித் பற்றி இவர் இப்படி பேசியது அவருடைய ரசிகர்களை கோபமடைய செய்தது. ஒரு பேட்டியில் மட்டுமின்றி 3 பேட்டிகளிலாவது அஜித் பற்றி அவர் பேசியிருந்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் ஒரு மனுஷனே இல்லை என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அஜித் என்பவர் என்னை பொறுத்தவரை மனுஷனே இல்லை. நான் அவர் எனக்கு பணம் தரவில்லை என்று புலம்புவதாக சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ஏனென்றால், நான் புலம்பவில்லை நான் என்னுடைய அனுபவத்தை தான் சொல்கிறேன். பணத்தை கொடுத்து நான் ஏமாந்தால் ஏமாளி என்று சொல்லலாம். நான் செய்த தவறு அது எனக்கு தண்டனையாக இந்த ஏமாற்றம் தான் கிடைத்தது. ஜெண்டில் மேன் என்றால் அதனை நிருபிக்கவேண்டும்” எனவும் அஜித் குறித்து மாணிக்கம் நாராயணன் பேசியுள்ளார். அஜித் குறித்து இவர் விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

22 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

54 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago