Bigg Boss Tamil Season 7 [File Image]
பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சியில் இப்போது தான் சண்டைகள் நடைபெற தொடங்கி இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வத்தி குச்சி வனிதா என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மகள் ஜோவிகா கலந்துகொண்டுள்ளார். வனிதாவிடம் யாராவது சண்டைக்கு சென்றாலே அவருடைய பேச்சுக்கு யாரும் எதிர்பேச்சு கூட பேச முடியாத அளவிற்கு சண்டைபோட்டு விடுவார்.
அவருடைய மகளும் அவருக்கு இணையாக பேச கூடியவராக தான் இருக்கிறார். குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்திராவுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். படப்பிப்பு விஷியத்திற்காக இந்த வாக்கு வாதம் நடைபெற்றுள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடும் காட்சி இடம்பெற்று உள்ளது.
ப்ரோமோவில் ” விசித்ரா எழுத படிக்க தெரியவேண்டும். நீ தமிழ் எதாவது போய் எழுது பாப்போம் என்று கூறுகிறார். அதற்கு ஜோவிகா நான் தமிழ் படிக்கவே இல்லை என்று கூறிவிட்டு எனக்கு எழுத படிக்க வரவில்லை நான் அதனால் அதை செய்யவில்லை. இதன் காரணமாக தான் நான் படிக்கவே இல்லை. படித்தால் தான் வாழ முடியும் என்று ஒண்ணுமே இல்லை ” என்று மிகவும் காட்டத்துடன் பேசி சென்று போகிறார்.
இதைப்போலவே, மற்றோரு ப்ரோமோவில் ஜோவிகா நான் இங்கு வந்த ஒரே ஒரு காரணம் என்னவென்றால், படிப்பு என்கிற விஷயத்தால் சில குழந்தைகள் தவறான வழிக்கு செல்கிறார்கள். அவர்களை பற்றி பேசி சில விஷயங்களை புரிய வைக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேசி இருந்தார்.
இந்த வயதில் இப்படி ஜோவிகா கத்தி பேசியதை பார்த்த நிக்சன், ரவீனா, பவா செல்லதுரை ஆகியோர் கைதட்டி அவர் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜோவிகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில். படிப்பு எல்லாம் முக்கியமில்லை, படிச்சுதான் பெரிய ஆளாகுனும்னு இல்ல” என்று சொன்னதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலர், விசித்ரா இதை பற்றி சொன்ன முறை வேண்டும் என்றால் தவறாக இருந்திருக்கலாம் , ஆனால், படிப்பு முக்கியம் என்ற அவரின் அந்த கருத்தில் எந்த தவறுமில்லை எனவும் கூறி வருகிறார்கள்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…