சினிமா

தளபதி 68 அப்டேட் : யுவன் இசையில் ரெடியாகும் புது ப்ரோமோ… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Published by
பால முருகன்

விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் அவருடைய 68-வது படத்திற்கான படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். லியோ படம் அக்-19-ஆம் தேதி வெளியான நிலையில், அக் 2-ஆம் தேதி தளபதி 68 படத்தின் பூஜை சைலண்டாக நடைபெற்றது. லியோ படம் வெளியான காரணத்தால் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் தாமதமாக கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள நிலையில், தளபதி 68 படக்குழு தங்களுடைய படத்தின் அப்டேட்டை விட முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி, முதல் அப்டேட்டாக நடந்து முடிந்த பூஜைக்கான வீடியோவை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம்.

25 வயது இளைஞனாக நடிகர் விஜய்? VFX-க்கும் மட்டும் ‘தளபதி 68’ படக்குழு ஒதுக்கியது எவ்வளவு தெரியுமா?

பூஜை வீடியோவுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையையும் இசையமைத்து வருகிறாராம். அந்த பூஜைக்கான வீடியோ வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும். தற்போது தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அடுத்ததாக அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கிறதாம். அங்கு வைத்து தான் நடிகர் விஜய் மற்றும்  மோகனுக்கு இடையே நடைபெறும் சண்டைக்காட்சி எடுக்கப்படவுள்ளதாம். ஏனென்றால், படத்தில் நடிகர் மைக் மோகன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். பிரசாந்த், லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தின் வில்லன் யார் தெரியுமா? பிஸியான நடிகரை லாக் செய்த வெங்கட் பிரபு!

லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டும் வெளியாகவுள்ள காரணத்தால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும், தளபதி 68 படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயிமண்ட் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…

23 minutes ago

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

1 hour ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

2 hours ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

2 hours ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

3 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

4 hours ago