sirakadikka asai 19
Siragadikka asai serial -சிறகடிக்க ஆசை தொடரின் விறுவிறுப்பான இன்றைக்கான[ஜூன் 19] கதைக்களத்தை இங்கே காணலாம்.
முத்துவும் மீனாவும் குரு தட்சணையோடு டான்ஸ் கத்துக்க விஜயாவிடம் வருகிறார்கள். இவர்களை பார்த்த விஜயா கோபமாக இருக்கிறார். மீனா சொல்றாங்க நாங்க இங்கே டான்ஸ் கத்துக்க வந்திருக்கோம் அத்தை எங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுங்க அப்படின்னு சொல்றாங்க.
அதுக்கு விஜயா முடியாதுன்னு சொல்றாங்க. முத்துவை பார்த்து கேக்குறாங்க நீ குடிச்சிட்டு வீட்ல தள்ளாடுவையே அது மாதிரி நெனச்சிட்டியா இது பரதம் டா பரதம் அப்படின்னு சொல்றாங்க. முத்து சொல்றாரு எதையுமே கத்துக்கணும்னு ஆர்வம் இருந்தா போதும் . பார்வதியும் விஜயா கிட்ட இப்ப வரைக்கும் யாருமே கிளாசுக்கு வரல இவங்களுக்காச்சும் கற்றுக்கொடு விஜயா அப்படின்னு சொல்லிட்டு பாட்ட போட்டு விடுறாங்க.
கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டு போட்டு விடுறாங்க முத்துவும் மீனாவும் அதுக்கு டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க ..இதை பார்த்த விஜயாவுக்கு கோவம் வந்தது. மீனாவ பாத்து கேக்குறாங்க நீ என்ன தண்ணில நீச்சல் அடிக்கிற மாதிரி ஆடற அவன் என்னடானா ஒரு பாட்டுக்கு ஆடறான். அப்படின்னு சொல்லிட்டு அவங்க ஆடி காட்றாங்க.
அப்படி ஆடிட்டு இருக்கும்போது கழுத்துல சுளுக்கு புடிச்சிருது . வலியில் கத்துறாங்க .பார்வதி சொல்றாங்க இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தவங்க சுளுக்கு எடுப்பாங்க அவங்கள கூப்பிட்டு நான் வரேன் நீ வீட்டுக்கு போனு சொல்றாங்க. விஜயாவும் முத்து மீனா கூட வீட்டுக்கு போறாங்க ..
விஜயா வீட்டுக்குள்ள போனதும் கை ஒரு பக்கம் நீட்டிகிட்டே போகும்போது ஸ்ருதி ஹைபை காட்டுறீங்களா ஆன்ட்டி அப்படின்னு கையில அடிச்சிடுறாங்க மறுபடியும் வலியோட போயி சோபால உக்காந்துடுறாங்க. இப்போ அண்ணாமலை என்னாச்சுன்னு மீனா கிட்ட கேக்குறாங்க.
மீனா சொல்றாங்க அத்தைக்கு டான்ஸ் ஆடும் போது சுளுக்கு புடிச்சிக்கிச்சுன்னு சொல்றாங்க உடனே அண்ணாமலை சொல்றாங்க இதுக்குத்தான் ஓவரா ஆடக்கூடாதுனு சொன்னேன். பார்வதி சுளுக்கு எடுக்கிறவங்களோட வீட்டுக்கு வராங்க. சுளுக்கு எடுக்கறவங்க விளக்கெண்ணெய் எடுத்துட்டு வர சொல்றாங்க அதை வைத்து விஜயாவுக்கு கையில் உள்ள சுளுக்கு எடுத்து விடுறாங்க.
கழுத்துக்கு படி வச்சு ஒரு வாரம் தூங்குங்கன்னு சொல்லுறாங்க. உடனே ஸ்ருதி அது தப்பா புரிஞ்சுக்கிட்டு ஃபர்ஸ்ட் படிலயா.. செகண்ட் படிலையானு கேக்குறாங்க. ஆனா அவங்க சொன்னது அரிசி அளக்குற படிய தான் சொன்னாங்க. இப்போ விஜயா மீனாவை பார்த்து இப்ப உனக்கு சந்தோஷமா அப்படின்னு கேக்குறாங்க நான் ஏன் அத்தை சந்தோசப்பட போறேன் அப்படின்னு மீனா சொல்றாங்க .அதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது.
நாளைக்கான ப்ரோமோல மீனா பூ டெலிவரி பண்ண போறாங்க அப்போ ரோகினி ஓட மலேசியா மாமா தலையில ஒரு கேப் போட்டுட்டு நடந்து வராரு ..இதை மீனா பார்த்துறாங்க இவரு ரோகினியோட மாமாவாச்சே .. கல்கத்தா போறேன்னு சொன்னாரு இங்க சுத்திட்டு இருக்காரு அப்படின்னு அவரை நோக்கி போறாங்க .
இதை அவரும் பார்த்தாரு அய்யய்யோ இது ரோகினி ஓட வீட்ல இருக்க பொண்ணாச்சே, மாட்டிக்கிட்டோம்னா அவ்வளவுதான் அப்படின்னு நினைக்கிறாரு. நாளைக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…