ஆன்மீகம்

ஆஹா! திருவண்ணாமலை மலை மேல் ஏற்றப்படும் தீபத்திற்க்கு இவ்வளவு சிறப்பா …

Published by
K Palaniammal

கார்த்திகை தீபம் என்றாலே நம் நினைவில் வருவது திருவண்ணாமலை தீபம் தான் . எத்தனையோ  கோவில்கள் இருந்தாலும் கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பெற்றது இந்த திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இது அக்னி ஸ்தலம் ஆக விளங்குகிறது. இங்கு சிவன் மலையாகவே இருப்பதாக நம்பப்படுகிறது. முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்த ஸ்தலமாகவும் கூறப்படுகிறது திருவண்ணாமலையில் பத்து நாள் முன்பாகவே கொடியேற்றம் செய்யப்படும்.

கொடியேற்றத்தில் சிறப்பு

இந்த பத்து நாட்களும் பல்வேறு பூஜைகளும், வாகனப் புறப்பாடும் நடைபெறும். நவம்பர் 23ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதை எடுத்து பத்தாவது நாள் திருக்கார்த்திகை தீபத்தன்று காலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறைக்கு எதிரே பரணி தீபம் ஏற்றப்படும்.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும் சிவன் கோவிலின் அதிசயம்..

மாலை நேரம் , சிவன் அர்த்தநாதீஸ்வரர்  ரூபத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி வருவதை வருடத்தின் ஒருமுறை மட்டுமே தரிசிக்க முடியும். மாலை 6:00 மணிக்கு மலை மேல் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

மலை மேல் ஏற்றப்படும் தீபத்தின் சிறப்பு

மலை மேல் சுமார் ஆறு அடி உயரமும் 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் சுமார்  3500 கிலோ விற்கும் மேல் நெய்யை ஊற்றி, ஆயிரம் மீட்டருக்கு மேல் காடா துணியை திரியாக்கி கற்பூரத்துடன் சேர்த்து தீபம் ஏற்றப்படும். மலையின் மேல் ஏற்றப்படும்  தீபம் பத்து நாட்களுக்கு மேல் எரிந்து  கொண்டே இருக்கும் .மலையைச் சுற்றி சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தீபத்தை தரிசிக்கலாம்.பிறகு பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள் ,மலையை சுற்றிலும் சிவனடியார்களால் அன்னதானம் வழங்கப்படும் .இங்கு விளக்கேற்றிய பிறகே அனைவரது இல்லங்ககளிலும் விளக்கேற்ற படுகிறது .

மற்ற கோவில்களில் ஏற்றப்படும் தீபங்கள் 

இத்திரு  கார்த்திகை அன்று முருகப்பெருமான் ஆலயத்தில் குமாரலாய  தீபம் ஏற்றப்படுகிறது. மற்ற சிவ ஆலயங்களில் பௌர்ணமி அன்று சர்வாலய தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் பெருமாள் கோவில்களில் விஷ்ணு ஆலய தீபம் ஏற்றப்படுகிறது. இத்தனை சிறப்புகள் கொண்ட திருக்கார்த்திகை அன்று ஒரு முறையேனும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசித்து மழையின் மேல் ஏற்றப்படும் ஜோதியை கண்டு வாழ்வில் பிரகாசத்தை காண்போம்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

6 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

8 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

11 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

12 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

12 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

15 hours ago