ஆன்மீகம்

உடைந்த மற்றும் பழைய விளக்குகளை என்ன செய்யணும்னு தெரியலையா? அப்போ இந்த பதிவை படிங்க..

Published by
K Palaniammal

நம் வீட்டு பூஜை அறையில் பயன்படுத்திய காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு உடைந்து விட்டால்  என்ன செய்வது மற்றும் பூஜை அறையில் எத்தனை விளக்கு போட வேண்டும் என்பது பற்றியும் எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

விளக்கு  என்றாலே அது ஒளியை தரக்கூடிய பொருள். அது மங்களகரமாகத்தான் இருக்க வேண்டும் உடைந்து விட்டாலோ அல்லது அந்த விளக்கில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டிருந்தாலும் அதை நாம் பயன்படுத்தக் கூடாது இவற்றை மாற்றி புதிய விளக்குகளை தான் பயன்படுத்த வேண்டும்.

அன்றாடம் ஏற்றி வழிபட்டு கொண்டிருந்த மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்திய விளக்குகள்  பழையதானாலும் சிலர்  ஞாபகத்திற்காக அப்படியே வைத்திருப்பார்கள். அப்படி செய்வது நல்லதல்ல. இந்த விளக்குகளை எல்லாம் நாம் மாற்றி புதிதாக தான் பயன்படுத்த வேண்டும்.

புதிய விளக்குகளை வாங்கிய பிறகு செய்ய வேண்டியவை

நாம் முதன் முதலில் புதிதாக காமாட்சி விளக்கு அல்லது வெள்ளி விளக்கு ஏற்றும்போது மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு தட்டில் பச்சரிசி மற்றும் சில்லறைகளை வைத்து அதன் மீது விளக்குகளை வைக்க வேண்டும். பிறகு அதிலே நெய்  ஊற்றி  ஏற்ற வேண்டும். அந்த நெய்யில்  மூன்று அல்லது ஐந்து கற்கண்டுகளை போடலாம் இவ்வாறு செய்வது நல்லது.

பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் தெரியுமா

பூஜை அறையில் ஒற்றை விளக்கு ஏற்றுவதை விட இரட்டை விளக்குகளை ஏற்றுவது மிகச் சிறப்பாகும், இது அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியமான வாழ்வையும் கொடுக்கும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் அதிக நேர்மறை ஆற்றல் இருக்கும்.

வெள்ளி விளக்கின் சிறப்பு

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்கு லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. வெள்ளி விளக்கு ஆடம்பர விளக்காக மட்டும் கருத வேண்டாம்.

எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றுவது

  • பொதுவாக நாம் விளக்கேற்றும் போது அதில் நல்லெண்ணையை ஊற்றி ஏற்றுவது மிகவும் சிறப்பு இது உடல் ஆரோக்கியமாக இருக்க சிறப்பு வாய்ந்ததாகும்.
  • அது மட்டுமல்லாமல் சுத்தமான நெயிலும் விளக்கு ஏற்றலாம். கடையில் வாங்கிய நெய்யை தவிர்க்க வேண்டும்.
  • பஞ்ச கூட்டு எண்ணெய் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கு என்று பலவித மார்க்கெட்டில் கிடைக்கிறது அதையும் தவிர்க்க வேண்டும்.
  • இந்த முறைகளை பயன்படுத்தி விளக்குகளை நாம் மாற்றியும் புதிதாக விளக்கு ஏற்றியும் வாழ்க்கையில் புதிதாக பிரகாசிக்க செய்வோம்.

Recent Posts

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

18 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

3 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

4 hours ago