இந்த வருடம் தைப்பூசம் ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசம் என்றாலே முருகனுக்கு உரிய தினம் என்று அனைவருமே அறிந்ததுதான், ஆனால் அன்று யாரையெல்லாம் வழிபடலாம் ,தைப்பூசத்தின் சிறப்பு ,பூசம் துவங்கும் நேரம்,வழிபாடும் நேரம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
தைப்பூசத்தின் சிறப்பு
பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்று சேரும் நாளையே தைப்பூசம் என்கிறோம்.பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி ஞானவேலை கொடுத்த தினமாக தைப்பூசம் கருதப்படுகிறது. அந்த வேலை கொண்டுதான் திருச்செந்தூரில் அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார் .அதனால் மற்ற முருகன் கோவிலைக் காட்டிலும் பழனியில் சிறப்பாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச நாளை ஒட்டி தான் 48 நாட்கள் விரதம் இருந்து பக்தர்கள் பழனி செல்கிறார்கள்.வேல் என்பது ஞானத்தையும் வெற்றியும் தரக்கூடிய உன்னதமான ஒரு பொருளாகும். நம் கைகளின் அமைப்பும் வேலின் அமைப்பும் ஒன்று போல தான் இருக்கும். நுனிப்பகுதி கூர்மையாகவும், நடுப்பகுதி விசாலமாகவும் ,அடிப்பகுதி ஆழமாகவும் இருக்கும். இதன் பொருள் என்னவென்றால் அறிவு, கூர்மையாகவும் அகன்றும் ஆழமானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
சிவபெருமானும் பார்வதி தேவியும் ஆனந்த நடனம் ஆடிய தினமாகவும் இந்நாள் கூறப்படுகிறது மேலும் முருகப்பெருமான் சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த நாளாகவும் புராணங்கள் கூறுகிறது. ஆகவே இன்று குரு வழிபாட்டிற்கு சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது. குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த வருடம் தைப்பூசம் வியாழக்கிழமை வருவதால் மிகச் சிறப்பாகவும் உள்ளது. இன்று குபேர பூஜை செய்வது சிறப்பு.
இன்றைய வருடம் பூசம் தொடங்கும் நேரம் மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரம்
இந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி காலை 9. 14 மணிக்கு பூசம் துவங்குகிறது . பௌர்ணமியும் பூசமும் சேரக்கூடிய நேரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகும். அதனால் காலை 9. 20 – 10.30, வரை காலை வழிபாடும் மாலை நேரத்தில் 6.15-7.30 வரை வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.ஆகவே இந்த தைப் பூசத்தன்று முருகப்பெருமானை வழிபாடு செய்து எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வோம் .
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…