திருவண்ணாமலை நிலச்சரிவால் மகாதீபம் ஏற்றுவதில் மாற்றங்கள் ஏற்படுமா?.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா  நேற்று [டிசம்பர் 4] கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

thiruvannamalai (1)

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா  நேற்று [டிசம்பர் 4] கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

திருவண்ணாமலை :திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்  நேற்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை தீபமாலையானது 2268 அடி உயரம் கொண்டது .கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு சென்று அதில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

திருக்கார்த்திகை திருவிழாவின் கொடியேற்றத்துடன்  அண்ணாமலையாருக்கு 11 நாட்கள் தினசரி விழாக்கள் நடைபெறும். தற்போது திருவண்ணாமலையில் மூன்று இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தீப விழாவில் மாற்றங்கள் இருக்குமா என கேள்விகளும் எழுந்துள்ளன. ஏனென்றால் தீபக் கொப்பரை ஏற்றி செல்ல 15 கிலோ எடை கொண்ட நெய் டன்னை  தலையில் சுமந்து மலை  உச்சிக்கு கொண்டு செல்வது திரி எடுத்துச் செல்வது என தினமும் 300 லிருந்து 400 பேர்கள்  மலையில் ஏறி இறங்குவார்கள்.

அது மட்டுமல்லாமல் தீபத்திருவிழா அன்று சுமார் 2000 பேருக்கு மலை ஏற  ஆதார் அடையாள அட்டையுடன்  அனுமதி  வழங்கப்படுகிறது .அந்த வகையில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் மலையில் தீபம் ஏற்றும் இடம் மேற்கு பகுதியில் உள்ளது. மலையின் வடக்கு பகுதி வழியே  மக்கள் ஏறி  செல்வது வழக்கம் .

ஆனால் மண் சரிவு நடந்த இடமோ தெற்கு பகுதியில் தான். ஏழு பேரின்  உயிரை பறித்த மண் சரிவு ஏற்பட்ட இடம் கிரிவலப் பாதையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .இரண்டாவது மண்சரிவு ஏற்பட்ட இடம் அதிலிருந்து 600 மீட்டர் தொலைவிலும், மூன்றாவது மண் சரிவு ஏற்பட்ட இடம் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது. இதனால் மகா தீபம் ஏற்றப்படும் இடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss