[Representative Image]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கும் பணிகளுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிக பணியாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளவர்கள் விண்ணப்பிக்க எதுவாக பணியின் விவரங்கள் குறித்து தற்போது மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள் (BLF), ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF), சமுதாய வள பயிற்றுநர்கள்(CRPs) மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு (SHG) பயிற்சி அளித்திட வட்டார வள வல்லுநர் (BRP) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அப்பதவிக்காக கேட்கப்பட்டுள்ள தகுதிகள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதே ஆகும்.
இப்பணிக்கான தகுதி விவரங்கள்…
மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு, விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் வரும் ஆகஸ்ட் 09ஆம் தேதியன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை கட்டடம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி-க்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சுய விவரங்கள் (Bio Data) அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பித்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி ஐஏஎஸ் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…