Categories: இந்தியா

ரயிலை தவற விட்டீர்களா? இதை செய்ங்க .. அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் போகலாம்!!

Published by
அகில் R

இந்தியன் ரயில்வே: இந்திய நாட்டில் இருக்கும் நாம் ரயிலை தவற விட்டு விட்டோம் என்றால் என்ன செய்யலாம்? அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதில் பலரும் சரியான நேரத்தில் ட்ரெயினை தவற விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன்? இதை படிக்கும் நீங்களும் கூட அதில் ஒருவராக இருக்கலாம். ட்ரெயினை தவறவிட்டு அந்த டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தில் பாதியையும் நாம் பெற்றிருக்கலாம்.

ஆனால், நம் எல்லாருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கலாம். அது என்னவென்றால் அதே டிக்கெட்டில் அதே நாளில் மற்றொரு ரயிலில் ஏறலாமா என்று. அந்த கேள்விக்கான பதில், ஆம்! .. என்றாலும் அதற்க்கான சில விதிமுறைகளை இந்திய ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகள் என்ன? என்பதனை குறித்து தற்போது பார்ப்போம்.

அதே டிக்கெட்டை பயன்படுத்தி மற்றோரு ரயில் ஏராளமா?

கண்டிப்பாக ஏறலாம், ஆனால் நீங்கள் ஏற்கனவே தவறவிட்ட ட்ரெயின் டிக்கெட்டை பத்திரமாக வைத்து கொண்டு, ஒரு ஜெனரல் டிக்கெட் எடுத்துவிட்டு அதே இடத்திற்கு செல்லும் அடுத்த ட்ரெயின் அல்லது அது வழியாக செல்லும் வேறொரு ட்ரைனிலோ ஏறிவிட்டு நாம் எடுத்த ஜெனரல் டிக்கெட்டை ட்ரெயின் TTR-யிடம் காண்பித்து முறையாக நடந்ததை அவரிடம் கூற வேண்டும்.

இதன் மூலம் ட்ரெயின் TTR நமக்கு அதே ட்ரைனில் நமக்கு தகுந்த ஏதேனும் ஒரு இருக்கைக்கு தருவதற்கு வாய்ப்பாக அமையும். ஆனால், நீங்கள் கண்டிப்பான முறையில் ஜெனரல் டிக்கெட் எடுத்து கொள்ளவேண்டும். நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்த (தவறவிட்ட) ட்ரெயின் டிக்கெட்டை மட்டும் காட்டினால், உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

பணத்தை திரும்ப பெறுவது எப்படி:

தவற விட்டு ட்ரெயின் டிக்கெட்டின் பணத்தைத் திரும்பப் பெற, நீங்கள் டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR) தாக்கல் செய்ய வேண்டும். ரயிலை தவறவிட்ட 4 மணி நேரத்திற்குள், நீங்கள் TDR ஐ பதிவு செய்ய வேண்டும் என்று IRCTC விதிமுறை கூறுகிறது.

அதன்படி, நீங்கள் நேரத்தை தாண்டி தாக்கல் செய்தால் பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள் எனவும் IRCTC விதிமுறை கூறுகிறது.

TDR ஐ எவ்வாறு தாக்கல் செய்வது எப்படி?

  • டிடிஆர் (TDR) பதிவுசெய்ய உங்கள் மொபைலில் அதிகாரபூர்வ IRCTC ஆப்பில் நுழைந்து, அதில் ரயிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பிறகு, ஃபைல் டிடிஆர் என்பதை தேர்வு செய்யவேண்டும். அது நாம் அந்த டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு ஃபைல் டிடிஆர் (File TDR) தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன்பின், டிடிஆர்ஐ பதிவு செய்வதன் மூலம், நீங்கள் அதற்கான காரணத்தையும் அதில் சரியாக பதிவிட வேண்டும்.
  • இப்படி செய்வதனால், உங்கள் TDR தாக்கல் செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் உங்கள் பணம் வந்துவிடும் என ரயில்வே விதிகள் கூறுகிறது.
Published by
அகில் R

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

3 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

4 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago