Mamata Banarjee says about Kanchanjunga Express Accident [File Image]
மேற்கு வங்கம்: பேரிடர் குழு, மருத்துவ குழுக்கள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் பார்த்து பேசினேன் – மே. வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே, அகர்தலா – சீல்டா இடையேயான பான்சிதேவா பகுதி ரயில் பாதையில், நின்று கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துகுள்ளானது. இந்த ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 60 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்து குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ராகுல் காந்தி என பலர் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர். விபத்தில் உயிரிழந்தோருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தோருக்கு 2.5 லட்ச ரூபாய் நிவாரணமும், லேசான காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து இன்று, செய்தியாளர்களிடம் பேசிய மே. வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, விபத்து குறித்து அறிந்ததும், உடனடியாக பேரிடர் குழுவையும், மருத்துவர்கள் குழுவையும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீண்டும் ரயில் பாதை இயல்பு நிலைக்கு திரும்பவும் துரித நடவடிக்கையை மேற்கொண்டோம்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வர முயற்சித்தேன். ஆனால் அந்த சமயம் விமானம் இல்லை. நான் இப்போது இங்கு (டார்ஜிலிங்) சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளையும் பார்க்க வந்துள்ளேன். அகர்தலா, ஜார்கண்ட் மற்றும் உள்ளூர் நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்தோம். மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…