Categories: இந்தியா

அடேங்கப்பா! ஆனந்த் அம்பானி திருமண செலவு எம்புட்டு தெரியுமா?

Published by
பால முருகன்

ஆனந்த் அம்பானி திருமணம் : பிரபல பணக்காரரான முகேஷ் அம்பானி தன்னுடைய இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரமாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் இன்று (ஜூலை 12 ஆம் தேதி) மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது.

இன்று தான் இவர்களுடைய திருமணம் என்றாலும் கூட கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டது என்றே சொல்லலாம்.  ஏனென்றால், உலக பிரபலமான ரிஹானா மற்றும் ஜஸ்டின் பீபர் போன்றவர்களை அழைத்து தங்களுடைய திருமண நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தினர் பாடல்களை பாட வைத்தனர்.

இவர்கள் வருவதற்கு சம்பளமாக பல கோடிகளை கொடுத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போல, அம்பானி குடும்பத்தினர் அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் உடைகள் ஆகியவற்றின் விலை குறித்தும் தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இதனை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தற்போது இவர்களுடைய திருமண செலவு மொத்தமாக எவ்வளவு என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் கொடுத்த தகவலின் படி, ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிர்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மொத்தமாக ரூ. 4,000 கோடி முதல் 5,000 கோடி வரை ($0.6 பில்லியன்) செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அடேங்கப்பா இவ்வளவா? என  ஆச்சரியத்துடன் கூறிவருகிறார்கள்.

மேலும், இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அடுத்ததாக நாளை  ஜூலை 13 ‘மங்கள் உத்சவ் விழா’ மற்றும் ஜூலை 14 அவர்களின் திருமண வரவேற்பு விழாவும் நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago