[image source: isro]
மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக 670 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்களின் சோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. அந்தவகையில், ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. பல சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின்கள் செயல்படும் வகையிலான சோதனைகள் நடத்தப்பட்டன.
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…