JavedAhmedWani [Image source : hindustantimes]
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காணாமல் போனதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் அச்சாதல் பகுதியில் வசிக்கும் ஜாவேத் அகமது வானி என்ற இந்திய ராணுவ வீரர் சனிக்கிழமை மாலை காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லடாக் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இவர் விடுமுறையில் இருந்துள்ளார்.
அவர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காகச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள பகுதிகளிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த தேடலின் பொழுது பரன்ஹால் கிராமத்தில் அவரது காரில் ஒரு ஜோடி செருப்புகள் மற்றும் இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்பிறகு, காணாமல் போன ராணுவ வீரரைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய ராணுவ வீரர் கடந்தப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், ராணுவ வீரர் ஜாவேத் அகமது வானி கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…